சொல்லன்றி எதுவுமற்றவன்! – 322

இது ஒருவகையில் திட்டமிட்டுப் பரப்பின ‘நவீன போதை’ என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் சொல்வது உண்மைதான். எப்படி மது, கஞ்சா, பான் போன்றவற்றுக்கு அடிமையாக இருந்தார்களோ; இருக்கிறார்களோ, அதுபோல இந்த நவீன உலகில் நகர்பேசி அடிமைகளாக இன்றைக்கு மிகுதியானவர்கள் மாறியிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இந்நகர்பேசியைக் கொண்டு, அதனை அளவாகப் பயன்படுத்தி, எண்ணற்ற அரிய காரியங்களை அதாவது, பெரும் வேலைகளை மிகமிக எளிதாக்குவது தொடங்கி, செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு என்னையே உதாரணமாகச் சொல்லலாம்.

என் ஐயா மது குறித்து நான் சிறுவனாக இருக்கும்போது சொன்ன வார்த்தைகள் இப்போதும் என் நினைவில் உள்ளன. ‘குடிக்கிறது தப்பு இல்ல. ஆனா, அது நம்மள மீறிப் போச்சுன்னாதான் தப்பு.’ அதையேதான் இந்நகர்பேசி விஷயத்திலும் சொல்லத் தோன்றுகிறது.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 321

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=