சொல்லன்றி எதுவுமற்றவன்! – 319
குழு அரசியல் போல இதனை விருது அரசியல் என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆமாம். இளம் படைப்பாளிகள் பலர் அதையே ஒரு வேலையாக இன்றைக்கு செய்து வருகிறார்கள். அதற்காக மாதக் கணக்கில் ஏன், வருடக் கணக்கில்கூட யார் யாரையோ போய் பார்த்து, அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்து, அவர்களது புகழ் பாடி, அடி வருடி, கடைசியில் நினைத்ததை அடைந்தும் விடுகிறார்கள்.
ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் உயர்ந்த அங்கீகாரம், யார் என்றே தெரியாத வாசகர்கள் படைப்பை வாசித்துவிட்டு உகுக்கும் கண்ணீர்த் துளியிலும், அடையும் உவகையிலும்தான் உள்ளது என்பது எப்போது இவர்களுக்குப் புரியப்போகிறதோ, தெரியவில்லை. பாவம்.
[இன்னும்]
*