சொல்லன்றி எதுவுமற்றவன்! – 313
இவ்வாறு தனித்திருப்பதில் உள்ள சுதந்திரம் மற்றும் குறை என எதைச் சொல்வீர்கள்?
சுதந்திரம் பல உண்டு. ஆனால், குறை நம் படைப்பு எளிதில் பலரிடம் போய் சேராது என்பது மட்டும்தான்.
உண்மையில் பார்த்தால் இதுவும் ஒருவகை பாவனைதான். இது புரியாமல் பலர் குழுக்களில் ஐக்கியமாகி, அக்குழுவின் தலைமைக்குத் துதிபாடி, அவர்களது எல்லாக் கீழ்மைக்கும் துணை சென்று, இடும் ஆணைக்கெல்லாம் கட்டுப்பட்டு, எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்பதையே குறியாகக் கொண்டு செயல்படுவதை பார்க்கமுடிகிறது.
அதுவே, எந்தக் குழுக்களிலும் இல்லாத என் போன்றவர்களால் நினைத்தபடி நினைத்த நேரத்தில் இருக்க முடிவதோடு, எந்த நிர்பந்தத்தாலும், சுய ஆதாயத்தாலும் குழுக்களின் சட்ட திட்டங்களுக்காக இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் கூறி போலியாக இருக்கத் தேவையில்லை. மொத்தத்தில் நாம் நாமாக, சுயமாக, கம்பீரமாக இருக்கலாம்.
[இன்னும்]
*