சொல்லன்றி எதுவுமற்றவன்! – 312
இன்றைய தமிழ் இலக்கிய உலகம் குழு குழுவாகப் பிரிந்து கிடக்கிறது. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இது குறித்து நினைக்க ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஒருபோதும் அந்தக் குழுக்களுள் ஒருவனாய் நானும் இருக்கக் கூடாது; அதில் உள்ளோரைப் போல குழுக்கள் இடும் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு, அடங்கி ஒடுங்கி நடக்கக்கூடாது. ஆம்.
அதனால்தான் தொடர்ந்து அவற்றையெல்லாம் விட்டு விலகி, தனித்தே இருக்கிறேன். நல்ல வாசகன் இதுபோன்ற போலி குழுக்களையும், அவர்களது ஒவ்வாத அரசியலையும், செயல்களையும் எளிதில் அடையாளம் கண்டுகொள்வான். நான் ஓர் எழுத்தாளன் என்பதைத் தாண்டி நல்ல வாசகன் என்பதால், இதனை ஆரம்பத்திலேயே கண்டு அவர்களை விட்டு விலகியே இருக்கிறேன்.
[இன்னும்]
*