சொல்லன்றி எதுவுமற்றவன்! – 296

இன்றைக்கு வரக்கூடிய பல படைப்புகள் மிக மேலோட்டமாக இருக்கின்றதே?

இன்று மட்டுமல்ல, இது என்றும் இருப்பதுதான். அவற்றில் எது தகுதியானப் படைப்போ அது காலம் கடந்து நிற்கும். மற்றவை கால வெள்ளத்தில் காணாமல் போய்விடும். அவ்வளவுதான்.

இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். திருவள்ளுவர் காலத்தில் அவரைப் போல எத்தனையோ படைப்பாளிகள் இருந்திருப்பார்கள். திருக்குறள் மாதிரி எத்தனை எத்தனையோ படைப்புகளை படைத்திருப்பார்கள். அவையெல்லாம் இன்றைக்கு இருக்கின்றனவா? இல்லை.

இப்படித்தான் காலம்தோறும் பலநூறு படைப்பாளிகள் வருவர். இலக்கியப் படைப்புகளும் வரும். அவற்றில் தகுதியானது மட்டுமே நிற்கும். அவற்றை படைத்தவர்களே இருப்பர்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 295

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=