சொல்லன்றி எதுவுமற்றவன்! – 284

அரசின் நிதி, திட்டம் மற்றும் பணிகள் குறித்து யாரும் எதுவும் கேட்காததால்தான் எங்கும் எதிலும் முறைகேடுகளும், ஊழல்களும், ஏனோதானாக்களும் நிகழ்வதாக எண்ணுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுயஒழுக்கம் இல்லாததுதான் எல்லாவற்றுக்கும் காரணமாக நினைக்கிறேன்.

அரசு வேலைதானே செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் வந்துவிடும். அரசு கட்டிடம்தானே, சாலைதானே எப்படி அமைத்தால் என்ன, யார் கேட்கப் போகிறார்கள். அரசின் நிதிதானே, திட்டம்தானே என்னானால் யாருக்குத் தெரியப்போகிறது… இப்படி அரசு சார் பணிகளும், பணிகளில் உள்ளோரும் சுயஒழுக்கமற்று போனால் யாதாகுமோ, அதுதான் இன்றைய நிலையாக இருக்கிறது.

இவர்களுக்கு மத்தியில் எங்கோ ஆயிரத்தில் ஒருவர் அரிதாக சுயஒழுக்கத்துடன் இருப்பதையும் பார்க்கலாம். உலகில் எந்த நாட்டிலும் கல்வியும், மருத்துவமும் இந்த அளவுக்கு விலை போவதில்லை. எல்லாம் அரசிடம் இருக்கும். எனினும் தரமானதாகவும், நம்பிக்கைக்குறியதாகவும் விளங்கும்.

ஆனால் இங்கே, தலைகீழாகக் கிடக்கின்றன. எங்கோ ஒருவர் தவறிழைத்தால் திருத்தலாம். எல்லோரும் என்றால்…?

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 283

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=