சொல்லன்றி எதுவுமற்றவன்! – 282
ஆனால், அவ்வளவு பேரும் இந்நூலகம் குறித்து சொல்லிவைத்ததுபோல் பெருமையாக சொல்கிறார்களே?
அதுதான் எனக்கும் வேதனையாக இருக்கிறது. ஆட்சி மாறிய பிறகாவது ஏதேனும் உருப்படியான மாற்றம் நிகழும் என்று பார்த்தால், சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் நிகழவில்லை.
என் கேள்வியெல்லாம் ஒன்றுதான். ஏன், உயரதிகாரிகள் யாரும் திடீரென ஒருநாள் யாரிடமும் சொல்லாமல், குறிப்பாக நூலகத்தில் பணிபுரிபவர்களிடம், வந்து மக்களோடு மக்களாய் நூலகத்தை பார்ப்பதில்லை; பயன்படுத்தி எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதில்லை. மிகக் குறைந்தபட்சம் தொடர்ந்து நூலகத்துக்கு வந்துபோகும் என் போன்றவர்களிடம் குறை நிறைகளை கேட்டறிவதில்லை?
அப்படி ஓர் அதிகாரியாவது வந்து பார்த்து, கேட்டு தக்க நடவடிக்கை எடுத்தால் ஒருவேளை நல்ல மாற்றம் நிகழலாம். ஆனால், இதெல்லாம் நம்மூர் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.
[இன்னும்]
*