சொல்லன்றி எதுவுமற்றவன்! – 274
முப்பது கேள்விகளுக்கும் மிக அழகாக ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னீர்கள். இனி வழக்கம் போலவே நேர்காணலை தொடரலாம்.
எதற்காக எழுதுகிறீர்கள்?
முதலில் எனக்காக; என் மன நிறைவுக்காக. வெறுமை நிறைந்து கிடக்கும் இந்த பூமியில் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதற்காக. கண்டவற்றை, கொண்டவற்றை, அனுபவித்தவற்றை, அனுபவிக்க நினைத்தவற்றை எல்லாம் எழுதி எழுதி நிறைவதற்காக. என்னை நானே கண்டுகொள்வதற்காக. இங்கிருக்கும் கீழ்மைகளில் சிக்கிச் சீரழியாமல் மேன்மை நோக்கி நகர்வதற்காக.
இப்படி பலவற்றுக்காக எழுதுகிறேன் என்றாலும், முதன்மையானக் காரணம் மன நிறைவுக்காகத்தான். இல்லையென்றால், இத்தகைய எழுத்தாளர்களை, படைப்பாளிகளை மதிக்காத, புரிந்துகொள்ளாத ஒரு சமூகத்தில் எழுதத் துணிந்திருக்கமாட்டேன்; அடுத்தடுத்த படைப்புகளை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.
[இன்னும்]
*