சொல்லன்றி எதுவுமற்றவன்! – 275
இது கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களிடமும் கேட்ட கேள்விதான். எழுத்து சோறு போடுமா?
போடும். போடுகிறது. சாப்பிடுகிறேன். நன்றாகவும் இருக்கிறது.
(சொல்லிவிட்டு சிரித்தவர்) இந்தக் கேள்வியை சற்று மாற்றி கேட்டிருக்கலாம். ‘தமிழ் எழுத்து சோறு போடுமா?’
இங்கே தமிழ் எழுத்துதான் காலந்தோறும் பிரச்சனையே தவிர, உலகின் மற்ற எழுத்துகள் அல்ல. ஏன், நம் பக்கத்து மாநிலமான கேரளத்தையே எடுத்துக் கொள்வோமே. அங்கே எழுத்தாளர்கள்தான் மிகப்பெரும் நடிகர்களை காட்டிலும் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களது படைப்புகள்தான் திரைப்படங்களைவிட மிகுதியாக வாசிக்கப்படுகின்றன. இவை யாவற்றுக்கும் மேலாக எந்த எழுத்தாளரையும் அன்றாட சோற்றுக்கு அவதிப்பட வைத்ததில்லை.
ஆனால், தமிழ்ச் சமூகமோ சூடு சொரணையற்ற சமூகம். சொல்லிக் கொள்ளும்படி வாசிப்பதும் இல்லை. அதைப் படைத்தவர்களை மதிப்பதும் இல்லை. சொல்லப்போனால் இதுபோன்றதோர் இழிநிலையில் வாழ்ந்துவரும் ஒரு வாசிப்பற்ற சமூகம் உலகில் வேறு எங்குமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், (எதையோ சொல்ல வந்து சொல்லாமல் இடை நிறுத்தியவர், பின் தொடர்ந்தார்) இந்நிலை சமீப காலங்களில் கொஞ்சம் தேவலாம். அதாவது, ஓரளவுக்கு மாறி இருப்பதாக சொல்லலாம். இவை இன்னும் இன்னும் மாறவேண்டும். அப்போதுதான் இத்தகைய ஆபத்தக் கேள்வி இனியும் படைப்பாளிகள் நோக்கி எழாமல் இருக்கும்.
[இன்னும்]
*