சொல்லின்றி எதுவுமற்றவன்! – 222

அது ஏன் என்று விளக்கமாகச் சொல்லமுடியுமா?

ஒரு முன்னாள் பத்திரிகையாளராக இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள் எனப் புரிகிறது. பத்திரிக்கையாளர் என்பவர் நிறுவனம் தரும் சம்பளம் பெற்றுக்கொண்டு அவர்கள் போட்ட வளையத்துக்குள் நின்று மட்டுமே எழுதுவார்கள்; செயல்படுவார்கள். சிலநேரம் தம் மனத்துக்கு ஒவ்வாதவற்றையும் தெரிந்தே வேறு வழியின்றி செய்யவேண்டி இருக்கும். அதேபோல அவசியம் எழுதவேண்டியவற்றை எங்கே எழுதினால் தமது பணி போய்விடுமோ என்னும் பயத்தால் எழுதாமலும் இருப்பார்கள்.

ஆனால், ஓர் எழுத்தாளன் எங்கும் யாரிடமும் சம்பளம் பெறுவதில்லை. எந்த வட்டத்துக்குள்ளும் நின்றுகொண்டு சமரசம் செய்து எழுதவேண்டிய அவசியம் இல்லை. தன் மனத்துக்கு பட்டதை எழுதுவான். அதனால் எத்தனை இன்னல் வந்தாலும் சரி, துணிவுடன் எதிர்த்து நிற்பான். தன் வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக இச்சமூகத்திற்காக பங்கிட்டுத் தருவான். விரும்பியே வலியையும், கஷ்டத்தையும் ஏற்றுக்கொள்வான். இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லமுடியும்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 221

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=