ஆடூஉ மகடூஉ

கடந்த மே ஒன்று தொடங்கி, நேற்று முடிய தொடர்ந்து நூறு நாட்களாக பெண் குழந்தைகளுக்கான (பெண்பால்) புதுப்பெயர்களை பதிவிட்டு வந்தேன். அதற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இன்று தொடங்கி தொடர்ந்து 100 நாட்களுக்கு ஆண் குழந்தைகளுக்கான (ஆண்பால்) புதுப் பெயர்களை பதிவிட எண்ணியிருக்கிறேன்.

கூடவே, இவை முடிந்ததும் இன்னும் நானூறு ஆண், பெண் குழந்தைகளுக்கான பெயர்களை சேர்த்து, [உடன் சில கட்டுரைகளோடு,] அடுத்தாண்டு தொடக்கத்தில் அல்லது மத்தியில் ஒரு நூல் கொண்டு வரலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறேன். பார்ப்போம்.

*

நூலுக்கான தலைப்பாக,

// “ஆடூஉ மகடூஉ’’

(குழந்தைகளுக்கான புதுப் பெயர்களும்,

சார்ந்த கட்டுரைகளும்) //

எனப் பெயரிட்டிருக்கிறேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=