சொல்லின்றி எதுவுமற்றவன்! – 190
‘திருவாளர் ஊர்சுற்றி’க்குப் பிறகு, ‘ஐந்திணைப்பாட்டு’ என்றொரு நூல் எழுதியுள்ளதாக சென்றாண்டு பதிவிட்டிருந்தீர்கள். ஏன் இன்னும் அந்நூல் வெளியாகவில்லை?
என் எழுத்துப் பயணத்தில் மிக முக்கிய நூல்களில் ஒன்றாக இருக்கப்போகும் இந்த நூலில், ஐந்து திணைகளைப் பற்றி மிக விரிவாக எழுதி இருக்கிறேன். கூடவே, ஒவ்வொரு திணைக்கும் ஒரு பாடலாக, சங்க இலக்கியப் பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு இருப்பது போல எழுதியுள்ளேன். அவற்றுக்கு இசையமைத்து, காட்சிப்படுத்தி, பலப் புதுமைகளோடு வெளியிடலாம் என நினைத்ததால் இன்னும் வெளியாகவில்லை.
சில நூல்கள் அதற்கென சிலவற்றைக் கோரும். அதைத் தந்தால்தான் முழுமை பெறும். அவ்வாறு இந்நூல் கோரியவற்றைக் கொடுக்க எண்ணியிருக்கிறோம். பார்ப்போம்.
[இன்னும்]
*