சொல்லின்றி எதுவுமற்றவன்! – 168
ஆமாம். முதல் நாவல் எழுத ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள்? (நான் சொல்வது, ‘ஐயா’ முதல் ‘எங்க கல்யாணம்’ வரையான எட்டு நூல்கள் எழுதிய காலத்தை.)
(ஏற்கனவே இந்தக் கேள்விக்கான பதிலை தயாராக வைத்திருந்தது போல முகம் மலர்ந்தவர்)
ஒவ்வொரு படைப்பும் அதற்கான நேரத்தை அதுவாகவே தேர்ந்தெடுக்கும். அந்த சமயத்தில்தான் அது சரியாக வெளிப்படும் என்று நினைப்பவன் நான். அவ்வாறு அது தேர்ந்தெடுத்த நேரத்தில் வெளிப்பட்டதாகவே உணர்கிறேன்.
சொல்லப்போனால் எனது முதல் நூலை எழுதுவதற்கு முன்னாலேயே இப்படி ஒரு நாவல் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இரண்டு மூன்று நண்பர்களிடம் கூட கூறியிருக்கிறேன். என்றாலும் அது வெளிப்பட இந்தக் கால அளவும், படைப்புகளும் தேவைப்பட்டிருக்கிறது.
[இன்னும்]
*