சொல்லின்றி எதுவுமற்றவன்! – 163
உங்கள் திருமணத்தை ஒட்டியும், இந்நூலை எழுதும்போதும் சில சலசலப்புகள் முகநூலில் காணப்பட்டதே?
ஆமாம். ஈராயிரம் பேர்களுக்கு மேல் வாழ்த்திய இடத்தில் நான்கைந்து பேர் வந்து, ‘இதெல்லாம் ஒரு திருமணமா?’ என்று கேட்டிருந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், நண்பர்கள் சிலர் சொன்ன பதிலால் அவர்கள் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டார்கள்.
ஒரு விஷயத்தை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். திருமணமும், அதை ஒட்டிய சடங்கு சம்பிரதாயம் யாவும் மனிதர்கள் தம் வசதிக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டது போல நாங்கள் எங்கள் திருமணத்தை எங்களுக்குப் பிடித்தது போல செய்துகொண்டோம். இதில் எந்தத் தவறும் இருப்பதாக இதுவரை தோன்றவில்லை.
அதேநேரம் எதை செய்தாலும் குற்றம் சொல்ல ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் வேலையே இதுதான் என்னும்போது, நாம் அவர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது.
[இன்னும்]
*