சொல்லின்றி எதுவுமற்றவன்! – 149

நிலைத்திணை’யை வாசித்து முடித்ததும் ஒரு விஷயம் தோன்றியது. நீங்கள் பயணப்பட்ட இடங்கள் கூட (உதாரணமாக, உங்கள் கிராமம் தொடங்கி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் வரைக்கும். இன்னொரு பக்கம் அந்தமான் தீவுகள், மலேசியா என கடல் தாண்டியுள்ள இடங்கள்) இந்நூல் எழுதக் காரணமாக இருந்திருக்குமோ?

இருக்கலாம்.

(சொல்லிவிட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்தவர், சில நொடிகள் கழித்து) எங்கே போனாலும் அங்குள்ள தாவரங்களுடன் உறவாடும் மனம் வாய்த்தவர்கள் என்னைப் பொருத்தவரையில் பெரும் பாக்கியர்கள். அவர்களுக்கு மொழி தேவையில்லை. பணம், பதவி, அந்தஸ்து போன்ற எதுவும் வேண்டியதில்லை. உரையாடவும், உறவாடவும் சட்டென முடியும்.

ஆமாம், அப்படி நான் கண்டு உறவாடிய; உரையாடிய தாவரங்களில் சிலவற்றை பற்றி மட்டுமே இதில் எழுதி இருக்கிறேன். இன்னும் எழுதாதது எவ்வளவோ இருக்கின்றன.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 148

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=