சொல்லின்றி எதுவுமற்றவன்! – 148
ஆமாம். இத்தேடல் குறையாமல் இருப்பதால்தான், உங்கள் வயதுடைய படைப்பாளிகள் புனைவிலேயே தேங்கி இருக்கையில், அவர்களிலிருந்து வேறுபட்டு நீங்கள் இதுபோன்ற பெரும் படைப்புகளை படைக்க முடிகிறது. சரி, சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டிய அளவுக்கு ஏன் பக்தி இலக்கியப் பாடல்களை காட்டவில்லை?
(சிரிக்கிறார்)
காட்டியிருக்கலாம்தான். அது எங்கே இன்னும் கட்டுரையை பெரிதுபடுத்திவிடுமோ, படிப்பவர்களை திசை திருப்பிவிடுமோ, சோர்வுக்கு உள்ளாக்குமோ என்று நினைத்ததால் தவிர்த்தேன்.
என்றாலும், யார் யார் எதில் எதில் பாடியிருக்கிறார்கள் என்ற தகவலை சொல்லி இருப்பேன். அதேபோல, எந்தெந்த கோயில்களில் அத்தாவரம் தலத் தாவரமாக உள்ளது என்பதையும் கூறியிருப்பேன்.
ஒருவகையில், இதுவே போதும் என்று தோன்றியதால்தான். இன்னொரு வகையில், அப்படியே வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் தேடிப் படிக்கவும் வாய்ப்பு தந்திருக்கிறேன்.
[இன்னும்]
*