சொல்லின்றி எதுவுமற்றவன்! – 144
ஒருவகையில் பார்த்தால் கோவையில் தொடங்கிய நூலுக்கு, கோவையிலிருந்தே முதல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது…
(‘ஆமாம்’ என்று வேகமாக தலையாட்டி மகிழ்ந்தவர்) இதை நான் விருது பெற்றதும் மேடையிலேயே ஏற்புரையில் சொன்னேன்.
கோவை எனக்கு எப்போதுமே மனத்துக்கு மிக நெருக்கமான ஊர். முதல் தடவை 2018-ல் போனபோது செந்தில் அண்ணன் நட்பு கிடைத்தது. அடுத்த தடவை ஐயாவையும், அம்மாவையும் விமானத்தில் அவர் வீட்டுக்கு கூட்டிப் போனேன். என் முதல் நூலுக்கு கோவையில் இருக்கும் நாஞ்சில் நாடன் ஐயா முன்னுரை தந்தார். அதை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டது. இப்படி இன்னும் எத்தனையோவற்றை சொல்லலாம்.
வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பார்களே, அப்படி வந்தாரை கொண்டாடும் கோவை.
[இன்னும்]
*