சொல்லின்றி எதுவுமற்றவன்! – 143
கோவையின் முகங்களில் ஒருவராக இருக்கும் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட பலர் நிலைத்திணை குறித்து புகழ்ந்து பேசியதாக கேள்வியுற்றேனே?
ஆமாம், நானும் கூட கேள்விப்பட்டேன்.
ஒருநாள் புத்தகத் திருவிழாவில் எதிரில் வந்த எழுத்தாளர் சோ.தர்மன் ஐயாவிடம் சென்று என்னை அறிமுகம் செய்து பேசியபோது, அவருடன் இருந்தவர் அவரிடம், ‘இவரோட நூல்தான் இந்தாண்டு இளம் படைப்பாளர் விருது பெற்றிருக்கு. மரபின் மைந்தன் முத்தையா அவ்வளவு சீக்கிரம் யாரோட நூல் பத்தியும் புகழ்ந்து பேசமாட்டார். ஆனா, இவரோட நூல் பத்தி ரொம்ப உயர்வா சொல்றாரு’ என்றார். மகிழ்ச்சியாக இருந்தது.
இன்னும் பல ஆளுமைகள் பாராட்டினார்கள். அதில் ஒருவர், ‘இந்த நூல் எழுதினவர் 60 வயது கடந்தவரா இருப்பார்ன்னு பார்த்தா… சின்னப் பையனா வந்து நிக்கிறீங்க. எத்தனை அனுபவங்கள், எத்தனையெத்தனை தகவல்கள்’ என்று பாராட்டி தட்டிக் கொடுத்தார். அந்த உற்சாகத்தில்தான் அடுத்தடுத்த நூல்களை எழுதி வருகிறேன்.
[இன்னும்]
*