சொல்லின்றி எதுவுமற்றவன்! – 142

ஆமாம், நிலைத்திணை’க்காக கடந்தாண்டுஇளம் படைப்பாளர் விருது’ பெற்றீர்கள். அந்தத் தருணத்தை சொல்லுங்கள்…

விருதுகள், பரிசுகள் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை என்றாலும், அது ஒரு படைப்பாளிக்கு மிக அவசியம் என்றே கருதுகிறேன். அதுவும், என்போன்ற எப்பின்புலமும் இல்லாமல், எக்கூட்டத்தோடும் சேர்ந்து இலக்கிய அரசியலில் ஈடுபடாமல், தனித்து தொடர்ந்து இயங்குபவர்களுக்கு சிறு தட்டிக் கொடுத்தலாக; ஊக்கியாக அவை இருக்கும்.

அவ்வகையில் கடந்தாண்டு கோவையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், ‘இளம் படைப்பாளர் விருது’ எனக்கு வழங்கியது அத்தனை மகிழ்வையும் நிறைவையும் தந்தது. அதிலும் குறிப்பாக, யார் என்றே தெரியாதவர்கள் எல்லாம் வந்து, நிலைத்திணை நூலில் நான் எழுதியிருக்கும் விஷயங்களை ஆச்சரியத்தோடு பகிர்ந்து வாழ்த்தியது இன்னமும் கண்முன்னாலேயே இருக்கிறது.

சொல்லப்போனால், நிலைத்திணை இன்னும் சென்று சேர வேண்டிய தூரம் மிக அதிகம் என்று தோன்றும். பார்ப்போம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 141

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=