சொல்லின்றி எதுவுமற்றவன்! – 140

எத்தனை சாதாரணமாக ஒரு பாடைப்பாளரையும், அவரது படைப்பையும் ஊடகங்கள் புறக்கணித்து விடுகிறது அல்லவா?

ஆமாம்.

(எதையோ சொல்ல வந்து சொல்லாமல் நிறுத்தியவர், தனக்குள் சில நொடிகள் யோசித்துவிட்டு தொடர்ந்தார்)

நான் விகடன் பணியில் சேரும்போது ஒரு கதை சொன்னார்கள். விகடன் ஆசிரியராக அதன் நிறுவனர் எஸ். எஸ். வாசன் அவர்கள் இருக்கும்போது வந்த பலநூறு முகம் தெரியாத வாசகர் கடிதங்களில் இருந்து ஒரு கடிதத்தை அதுவும், நான்கு வரி மட்டுமே எழுதப்பட்டிருந்ததை அவர் படித்துவிட்டு, அக்கடிதம் எழுதியவரை உடனே புறப்பட்டு வருமாறு பதில் எழுதி அழைத்திருக்கிறார்.

வந்தவரிடம், ‘உங்களுக்குள் ஓர் எழுத்தாளர் இருக்கிறார். தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கான இடத்தை வழங்குகிறேன்’ என்று சொல்லி எழுத வைத்து ஊக்கப்படுத்தியிருக்கிறார். அவர்தான் கல்கி.

ஊடகங்களும், அதில் பணிபுரிந்தவர்களும் எப்படி இருந்திருக்கிறார்கள், எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணம் இது. ஆனால் இன்றைக்கோ, ஒரு பக்கம் கூட சரிவர எழுதத் தெரியாதவர்கள்தான் பெரிய பெரிய இதழ்களின் ஆசிரியராகவும், ஊடகங்களில் உயர் பொறுப்பிலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 139

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=