சொல்லின்றி எதுவுமற்றவன்! – 135

‘நிலைத்திணை’ உங்களது ஆறாவது நூல். உங்கள் எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமானப் படைப்பு. இப்படி ஒரு நூல் எழுதவேண்டும் என்று எவ்வாறு தோன்றியது?

‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ என்னும் எனது முதல் நூலுக்கு முன்னுரை தந்த மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள், நூலில் ஆங்காங்கே போகிற போக்கில் நான் தாவரங்கள் பற்றி எழுதி இருந்ததை வாசித்துவிட்டு, ‘சமகால இளைய இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கும் வாய்த்திராத செடி, கொடி, மரங்கள் பற்றிய அறிவு இவருக்கு வாய்த்திருக்கிறது. எனக்குத் தெரிந்து கண்மணி குணசேகரனும், என்.ஸ்ரீராமும் இரண்டு விதிவிலக்குகள். வடிவரசு, தானறியும் தாவரங்கள் பற்றிய புகைப்படங்களையும் தகவல்களையும் தொகுக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது’ என்று எழுதியிருந்தார். பின் நேரில் சந்திக்கும்போதும் அதையே சொன்னார்.

முதலில் தயக்கமாக இருந்தாலும், பிறகு, ‘எத்தனைப் பெரிய எழுத்தாளர் அதுவும், நாம் விரும்பிப் படித்தவர். நம்மிடம் எதையோ கண்டுகொண்டுதான் இதைச் சொல்கிறார். சரி, எழுதித்தான் பார்ப்போமே’ என ஆல மரம் பற்றி எனக்குத் தெரிந்ததை முதலில் ஒரு வடிவத்தில் எழுதி அவருக்கு அனுப்பினேன். உடனே வாசித்துவிட்டு கொண்டாடி தட்டிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து இன்னும் 19 மரங்கள் பற்றி எழுதிச் சேர்த்து நூலாகக் கொண்டு வந்துவிட்டேன்.

ஒருவேளை அவர் குறிப்பிட்டு சொல்லாமல் போயிருந்தால், இப்படி ஒரு நூல் எழுதியிருப்பேனா என்பது சந்தேகம்தான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 134

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=