வெயிட்டிஸ்

சிறுவர்கள் விளையாட்டின்போது இடையில் காயம்பட்டாலோ அல்லது வேறு காரணத்திற்காகவோ (சிறிதுநேரம்) இடைவெளி எடுத்துக்கொள்வதற்காக சொல்வது.
[‘Wait’ எனும் ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்தது.]
[வெயிட்டிஸ் = வெயிட்டீஸ் = வெய்டிஸ்]
– ஒனுக்குதான் கால்ல அடிபட்ருச்சில்ல… வெயிட்டிஸ் சொல்ட்டு போயி ஓரமா ஒக்காரு.
– இப்பயே சொல்ட்டன்… நடு ஆட்டத்துல யாரும் வெயிட்டீஸ் சொல்லி ஓடக்கூடாது.
*