சொல்லின்றி எதுவுமற்றவன்! – 122
100 நாட்களில் 100 பாடல்கள் உருவாக்கி வெளியிட பெரும் பண பலமும், ஆள் பலமும் தேவை. ஆனால், இவை இரண்டும் இல்லாமல் எவ்வாறு இது சாத்தியமானது?
ஆவலோடு எதிர்பார்த்த கேள்வி. நன்றி.
நீங்கள் சொல்வது போல பண பலமும், ஆள் பலமும் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், அந்தப் பிரபல பாடலாசிரியர். அதேநேரம், இவை இரண்டும் இல்லாமல் அதாவது, இவ்விரண்டை விட முக்கியமாக திறமையும், உழைப்பும் இருந்தால் போதும், எளிதில் சாத்தியப்படும். அதற்கு உதாரணம், நாங்கள்தான்.
நாங்கள் என்று இங்கே நான் சொல்வது, ஏதோ பெரும் எண்ணிக்கையிலான படையை அல்ல. நான், எனது இசையமைப்பாளர், தவிர இன்னும் ஐந்தாறு பேர். அதுவும், எல்லா பாடல்களுக்கும் கிடையாது. ஒரு சில பாடல்களில் மட்டும்தான் அவர்களது பங்களிப்பு இருக்கும்.
முதலிலேயே ஒன்றை தெளிவாக முடிவெடுத்தோம். யார் வந்தாலும் வராவிட்டாலும் சரி, நாங்கள் இருவர் மட்டும் இணைந்து இதை செய்தே ஆகவேண்டும். எங்களது புது முயற்சியை பார்த்த விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் அவர்களாகவே முன்வந்து, ‘நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா?’ என்றார்கள். மகிழ்வோடு சேர்த்துக் கொண்டோம்.
நல்ல விஷயம் செய்யும்போது அதுவும், அதற்கு நாம் உண்மையாக இருக்கும்போது, எங்கெங்கிருந்தோ உதவிகள் வரும் என்பார்கள். அப்படித்தான் வந்தது. அதிகம் இல்லை என்றாலும், மனத்துக்கு நிறைவாக இருந்தது.
[இன்னும்]
*