சொல்லின்றி எதுவுமற்றவன்! – 114
‘அகத்திரியில் ஏற்றிய நெருப்பு’ தலைப்பு எத்தனை அழகாக பொருந்தி இருக்கிறது, அந்தக் கடிதத்திற்கு?
ஆமாம். பலரும் குறிப்பிட்டு சொன்னார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஒவ்வொரு கடிதத்தை எழுதி முடித்ததும், அதன் ஒட்டுமொத்த சாரமும் அடங்குவது போல தலைப்பிட எண்ணினேன். அவ்வாறு இட்ட தலைப்புதான் இது.
அதுவும் என் அகத்தின் உள்ளிருக்கும் திரியில் ஏற்றப்பட்ட எழுத்து என்னும் நெருப்பை பற்றியது என்பதாலும், இந்நூலின் மிக முக்கிய கடிதங்களில் ஒன்றென்பதாலும், இதுவே பின்னர் நூலுக்கான தலைப்பாகவும் ஆகிவிட்டது.
படைப்பின் ரகசியமே இதுதான். நாம் ஒன்றை நினைத்து எழுத அமர்வோம். ஆனால், அந்தப் படைப்பானது நம்மைக் கொண்டு தனக்கு வேண்டியதை; வேறொன்றை நிகழ்த்திக் கொள்ளும். அவ்வாறு படைப்பு என்னைக் கொண்டு தன்னை நிகழ்த்திக் கொண்ட கடிதங்கள்தான் இந்நூல் முழுவதும் இருப்பது.
[இன்னும்]
*