சொல்லின்றி எதுவுமற்றவன்! – 101

ஹாஹா…ஆம், இல்லை’ என்பதை தாண்டிதெரியாது’ என்று சொல்லி தப்பித்துவிட்டீர்கள். சரி, இருக்கட்டும்.முகங்கள்’ நூலை… கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான ரவிசுப்பிரமணியன் அவர்களுக்கு சமர்ப்பித்து இருப்பீர்கள். அதற்கு தனிப்பட்ட காரணம் ஏதேனும் உண்டா?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் அவர், நான் பார்த்துப் பேசி பழகிய மனிதர்களில் மிக முக்கியமானவர். சொல்லப்போனால் ஓர் அண்ணன் அல்லது அப்பா ஸ்தானத்தில் இருப்பவர். என்னை கண்டிக்கவும், வழி நடத்தவும் அனைத்து உரிமைகளும் கொண்டவர். இந்நூலின் மொழியில் சொல்லப்போனால் தனித்துவமான முகம் (விட்டால் அவரைப் பற்றியும் எழுதிவிடுவேன். ஹாஹா…).

இரண்டாவது அல்லது மூன்றாவது முகம் எழுதும்போது என நினைக்கிறேன். அப்போதே இந்த நூலை அவருக்குத்தான் சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்படியே எழுதி முடித்ததும் சமர்ப்பித்தும் விட்டேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 100

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=