சொல்லின்றி எதுவுமற்றவன்! – 092

இவ்விருபது முகங்களில் உங்களுக்கு மிகப் பிடித்த முகம் எது, ஏன்?

(குனிந்து தரை பார்த்து சிலநொடிகள் யோசித்துவிட்டு) பிடித்த முகம் என்பதை விட நினைக்கும்தோறும் கண்ணீரை வரவழைக்கும் முகம் என்று ‘வினாமுகரை’ சொல்லலாம்.

எனது நெருங்கிய தோழியின் அப்பா. ஒருவகையில் அவர் எனக்கு, எதைப் பற்றி வேண்டுமானாலும் மனம்விட்டு பேசக்கூடிய நண்பர். என் மீது (அதிலும் குறிப்பாக என் உடல் நலத்தின் மீது) எப்போதும் அக்கறை கொண்டவர். தன் கையால் விதவிதமாக சமைத்துப் போட்டு சாப்பிட வைத்துப் பார்த்து ரசித்தவர். திடீரென இல்லை என்றானதை நினைத்தால் இதோ, இப்போதும் கண்கள் கலங்குகிறது.

அவருக்குள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வினாவுக்கு விடை தெரியாமல் போனது ஒருபக்கம் வருத்தம் என்றாலும், அவரே இல்லாமல் போனது அதைவிட பெரிய வருத்தம். இந்த நிமிடம் வரை அவரது இழப்பை என்னால் ஏற்க முடியவில்லை. அவர் மறைந்து நான்காண்டுகள் ஆகிறது. ஆனாலும் அவர் பார்த்துப் பார்த்து எனக்காக சமைத்துப் போட்ட மீன் குழம்பின் வாசம் இப்போதும் எனக்குள் வீசிக்கொண்டிருக்கிறது.

சில முகங்கள், முகங்களாக மட்டும் இருப்பதில்லை. பெரும் படிப்பினைகள். அதுவும் உலகில் வேறு எந்த ஆசிரியராலும், நூல்களாலும் கற்றுத் தர முடியாத படிப்பினைகளாக இருக்கின்றன. அவ்வகையில் இவ்வினாமுகர் என் வாழ்வில் மிக முக்கியமான முகம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 091

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=