அன்னக்கூடை

கூடைபோல் அகன்ற வாய் உடைய உலோகப் பாத்திரம்.
[விருந்துகளில் சோறு (வைத்து) பறிமாறவும், காய்கறி, பழம், புளி, மீன் வைத்து (எடுத்துப்போய்) விற்கவும் பயன்படுவது. சிறிய முதல் பெரிய வரை பல்வேறு அளவுகளில் இருப்பது.]
[அன்னக்கூடை = அன்னிக்கூடை]
– அன்னிக்கூடயில தண்ணி கீது பாரு… போயி குளிச்சிட்டு வா.
– எங்கனா போயி அன்னக்கூடயில ரவ செம்மண் அள்ளினு வா… ஒடஞ்ச செவுர கையோடப் பூசிடுவோம்.
*