சொல்லின்றி எதுவுமற்றவன்! – 067

ஆமாம், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நானும் பார்த்தேன். இந்தப் பாடலை பாடிய செந்தில் கணேஷ்ராஜலட்சுமி தம்பதியினர், எழுதிய உங்கள் பெயரையும், இசையமைப்பாளர் ஷ்ரவன் கலை பெயரையும் கூறாமல், ஏதோ அவர்களே உருவாக்கினது போல சொல்லிப் பாடினார்கள்.

ஆமாம். நண்பர்கள் பலரும் பார்த்துவிட்டு சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. சரி, போகட்டும் என்று விட்டுவிட்டோம்.

அதேநேரம் இது ஒன்றும் எங்களுக்குப் புதிது கிடையாது. ஏற்கனவே இன்று பிரபலமாக திரிந்து கொண்டிருக்கும் பாடலாசிரியர் ஒருவர் தொடங்கி, பலரால் பலவிதங்களில் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்.

ஒரு பாடலை நம்பி இருப்பவர்கள்தான் இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டும். அதுபோல் இன்னும் ஓராயிரம் பாடல் எழுத முடியும், உருவாக்க முடியும் என நினைக்கும் நாங்கள் எதற்காக கவலைப்பட வேண்டும்?

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 066

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=