சொல்லின்றி எதுவுமற்றவன்! – 062

இப்பாடல் வெளியீட்டின்போது கூட ஏதோ பிரச்சனை ஆனதாக எழுதியிருந்தீர்களே?

ஆமாம். இங்கே சாதிக்கு எதிரானவர்கள் என பொதுவெளியில் பேசிக்கொண்டு திரிந்தவர்களில் சிலர் இப்பாடலை வெளியிட முதலில் சம்மதம் தெரிவித்துவிட்டு, கடைசிநேரத்தில் வெளியிடாமல் போனதோடு, அதற்கான காரணத்தை கூட சொல்லாமல் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.

அப்போதுதான் ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. இங்கே சாதியை பற்றி பேசுவதே ஒருவகை அரசியலுக்காகத்தான், ஆதாயத்துக்காகத்தான், பிரபலத்துக்காகத்தான். இதை குறிப்பிட்ட சிலரைத் தவிர வேறு யாரும் புதிதாக வந்து பேசக்கூடாது என நினைக்கிறார்கள். அதுவும், எங்கே என் போன்று புதிதாக வந்து பேசுபவர்கள் அவர்களுக்குக் கிடைப்பதை பறித்துக்கொண்டு போய்விடுவார்களோ என அஞ்சி எங்கள் பாடலை வெளியிட மறுத்துவிட்டார்கள்.

ஒருவகையில் இது எங்களுக்கு வருத்தத்தை தந்தாலும், சில போலிகளை அடையாளம் கண்டுகொள்ள கிடைத்த வாய்ப்பாகவே எடுத்துக்கொண்டோம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 061

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=