சொல்லின்றி எதுவுமற்றவன்! – 060
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றான் பாரதி. நீங்களோ ‘சாதிகள் இருக்கடி பாப்பா’ என்கிறீர்கள். இதில் எதை எடுத்துக்கொள்வது?
பாரதி அன்று நடக்கவேண்டியதை அதாவது, தான் விரும்பியதை சொன்னான். நானோ இன்று இருப்பதை, இருக்கக்கூடாததை சொல்கிறேன். அவன் காலம் வேறு; என் காலம் வேறு. அன்றைய சமூகத்துக்கு தேவையானதை அவன் சொன்னான். இன்றைக்கு தேவையானதை நான் சொல்கிறேன்.
எங்கும் எதிலும் சாதியை வைத்துக்கொண்டு, சாதியால்தான் இங்கே எல்லாம் என்று ஆக்கிவிட்டு, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று இன்னமும் குழந்தைகளுக்கு பொய்யாக ஒன்றை சொல்லித் தருவது என் பொருத்தவரையில் வீண் என தோன்றியது. அதனால்தான் ‘சாதிகள் இருக்கடி பாப்பா’ என்ற உண்மையை உரக்கச் சொல்வதாய் ஒரு பாடலை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்த எண்ணினேன்.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 059