கட்டுக்கழி

கூரை வீடு மற்றும் கீற்றுக் கொட்டகை அமைக்கையில் சாய்த்துப்போடும் கழிகளின் மீது குறுக்காகப் போட்டுக் கட்டும் கழி.
[கட்டுக்கழி]
– மேலக்கி வூடுகட்ட இப்பருந்தே கட்டுக்கழி வெட்டி வச்சாதான், சல்லிசாருக்கும்.
– கட்டுக்கழி வெட்டப்போறன்னு… வூரு வம்ப வாங்கினு வந்து நிக்காத.
*