சொல்லின்றி எதுவுமற்றவன்! – 059

இப்பாடலை கேட்டுவிட்டு எழுத்தாளர் வண்ணதாசன் கூட ஏதோ சொல்லியிருந்ததாக ஒரு பதிவில் கண்டேனே?

(‘ஆமாம்’ என்பதாய் தலையசைத்துவிட்டு) பாடலை முழுவதும் கேட்ட வண்ணதாசன் ஐயா, ‘ஆமாம் வடிவரசு. அதுவும் பூ தான். அதுவும் உயிர் தான்’ என்றிருந்தார்.

அவர் மட்டுமல்ல… நான் பெரிதும் மதிக்கும் பாடலாசிரியர் பழநிபாரதி, கவிஞர் ரவிசுப்பிரமணியன், அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து, எழுத்தாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ ஆளுமைகள் கொண்டாடி தட்டிக்கொடுத்தார்கள்.

அதிலும் இப்பாடலின்,

‘கொடுமைகள் கோடி கண்முன் நடந்தும் –

தெரியா கண்கள் வரம்தான் நெஞ்சே…

கெட்டவை லட்சம் காதினில் விழுந்தும் –

கேட்கா காதுகள் இதம்தான் நெஞ்சே…

மற்றும்,

‘குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை –

இருந்தால் அவர்கள் மனிதர்கள் இல்லை…

குறைகள் பார்த்தால் உறவுகள் இல்லை –

குறையே பார்த்தால் வாழ்க்கையே இல்லை…’

போன்ற வரிகளை சாமானியர்கள் முதல் பேராளுமைகள் வரை பலரும் சுட்டிக்காட்டியது எழுதிய என்னை அத்தனை மகிழ்வித்தது.

பூமியில் எந்தவோர் உயிர்க்கும் எவ்விதத் தீங்கும் செய்யாமல் இருந்துவிட்டுப் போக வந்த உன்னதர்களைப் பற்றி எழுதிய பாடலுக்குக் கிடைத்த வாழ்த்தல்லவா? அதனால்தான் பாடலின் பல்லவியில் இவ்வாறு எழுதியிருப்பேன்.

‘நம் கடவுளை நேரில் –

பார்த்தோர் இல்லை…

இவர்தான் பாரீர் நெஞ்சே!’

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 058

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=