சொல்லின்றி எதுவுமற்றவன்! – 047

‘உங்கள் சென்னை’ பாடலில்,

மூன்றாம் பாலினப் பிள்ளையும் –

எந்தன் மடியில் உறங்குமே…

நான்கடி இருந்தால் போதும் – 

வாழ்க்கை மலருமே…’

போன்ற வரிகள் எனக்குப் பிடித்தமானது. இந்த வரிகளை எழுதவேண்டும் என எவ்வாறு தோன்றியது?

மூன்றாம் பாலினத்தவர்கள் அத்தனை மகிழ்வோடும், சுதந்திரத்தோடும் இங்கே நடமாடுவதையும்; வாழ்வதையும் பார்த்ததாலும்… வீடற்று சாலையோர நடைபாதைகளில் உறங்குபவர்களில் பலர் தம் கைகால்களை குறுக்கிக்கொண்டு வெறும் நான்கடி இடத்தில் இரவு முழுக்க உறங்கும் காட்சிகளை கண்டதாலும் இந்த வரிகள் எழுதத் தோன்றியது.

இப்பாடலில் நீங்கள் உள்ளிட்ட மிகச் சிலரே கவனித்த, மேலதிகமானோர் கவனிக்க மறந்த ஒரு விஷயத்தை இங்கே சொல்லலாம் என நினைக்கிறேன். இரு சரணத்திலும் வரக்கூடிய வரிகள் எண்களை கொண்டிருப்பதுபோல. அதாவது,

‘ ‘ஒரு’தாய் மக்கள் நீங்கள் என்று

ஓர் குரலில் சொல்லலாம்

இரவும் பகலும்இரு’ உலகம்

இங்குண்டு வாழலாம்…. 

‘மூன்றாம்’ பாலினப் பிள்ளையும்

எந்தன் மடியில் உறங்குமே….

‘நான்கடி’ இருந்தால் போதும் – 

வாழ்க்கை மலருமே….’

என முதல் சரணத்தில் ஒன்று முதல் நான்கும்,

‘ ‘ஐ’நான்கு விரலும் உழைப்பை பேசும் –

அதிசயம் இங்குதானே… 

‘ஏழு’ வண்ணமும் பார்த்து –

வியக்கும் நதி நகரமே…

இங்கு ‘எட்டுத்’ திசைகள் இருந்தும் –

புதிதொன்று முளைக்குமே…’ 

என இரண்டாவது சரணத்தில் ஐந்து, ஏழு மற்றும் எட்டும் வருவதுபோல எழுதியிருப்பேன். நடுவில் ஆறு மட்டும் இல்லாமல் இருக்கும். அது பாடல் உருவாக்கத்தின்போது நீளத்தை மனத்தில் கொண்டு நீக்கப்பட்டுவிட்டது. என்றாலும், இந்த எண் வரி எண்ணமும் ஒருவகையில் நீங்கள் குறிப்பிட்ட வரிகளை எழுதக் காரணம் என்று சொல்லலாம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 046

https://www.youtube.com/watch?v=Xd5Dfh90-fE&list=PLGUKnjwlHT3BFSsdSwv4_-21oTU5x2b2F&index=7
உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=