கோழிக்கூண்டு

கோழியை (உள்ளே விட்டு) அடைத்துவைக்கும் இடம்.
[பானையைப் போல் மண்ணால் ஆனது. குழவர்களால் செய்து விற்கப்படுவது.]
[கோழிக்கூண்டு = கோழிக்கூடு]
– எப்பப்பாரு எதுக்குதான் அந்த கோழிக்கூண்டுமேல போயி ஒக்காருவயோ, தெருல.
– கோழிக்கூண்டுல முட்டகிட்ட கீதான்னு ஒரெட்டு பாத்துட்டு வா, என் சாமில்ல…
*