சொல்லின்றி எதுவுமற்றவன்! – 038

அடுத்தடுத்து தனிப்பாடல்கள் வெளியிடவேண்டும் என்ற எண்ணம் எப்போது உருவானது?

கிட்டத்தட்ட ‘தொப்புள்கொடி’ பாடல் வெளியான சில தினங்களிலேயே. அது ‘சல்லிக்கட்டுடா’ பாடல் உருவாக்கத்தின்போது இன்னும் அதிகமானது. சொல்லப்போனால், எங்கள் ஒவ்வொரு தனிப்பாடல் வெளியீட்டின்போதும் இந்த எண்ணம் இன்னும் இன்னும் அதிகமாகிக்கொண்டே வந்தது. அதனால்தான் ‘மனிதா… மனிதா…’, ‘பெண்மீகம்’, ‘ஓ, மக்களே!’, ‘எஸ்குஸ்மீ பி.எம் சார்’, ‘உங்கள் சென்னை’, ‘வானம் தாண்டி’, ‘காலம் கடந்துடிச்சு’, ‘பேரன்புடன்’… என ஒன்றையடுத்து ஒன்றாய் அத்தனை உற்சாகத்தோடு வெளியிட முடிந்தது.

இப்போது திரும்பிப் பார்க்கையில் தமிழில் என் அளவுக்கு யாரும் அதுவும், இத்தனை குறுகிய காலத்தில் தொடர்ந்து தனிப்பாடல் எழுதி வெளியிட்டதாகத் தெரியவில்லை. இதுவரை வெளியான பாடல்கள் மட்டும் 120க்கு மேல் இருக்கும். நடுவில் கடந்த ஈராண்டுகளாக நாங்களாகத்தான் ஓர் இடைவெளி எடுத்துக்கொண்டோம். இல்லையென்றால் இந்த எண்ணிக்கை எப்போதோ 200ஐ தாண்டியிருக்கும்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 037

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=