சொல்லின்றி எதுவுமற்றவன்! – 045

பெண்மீகம்பாடல் விளிம்பு நிலை பெண்களுக்காக உருவாக்கியதாக சொன்னீர்கள். அவர்களில் யாரேனும் இந்தப் பாடலை கேட்டார்களா? கேட்டிருப்பின், என்ன சொன்னார்கள்?

ஒருவரல்ல, இருவரல்ல. எத்தனையோ பேர்கள். அவர்களில் பலர் கேட்டுக் கண்கலங்கினர். சிலர், ‘எங்களயும் மதிச்சு இப்படியெல்லாம் பாட்டு பண்ண உங்கள என்னிக்கும் மறக்கவே மாட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு பூ கட்டும் பாட்டி பாடலை பார்த்துவிட்டு; கேட்டுவிட்டு சொல்லற்று கண்கலங்கியபடி நண்பரின் கையை அழுந்த சற்றுநேரம் பிடித்துக்கொண்டிருந்திருக்கிறார். அவரது கையில் அப்பாட்டியின் கண்ணீர்த்துளி விழுந்திருக்கிறது. இதையெல்லாம் இப்பாடலுக்குக் கிடைத்த மிக உயரிய அங்கீகாரமாகவே எப்போதும் கருதுகிறேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 044

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=