சொல்லின்றி எதுவுமற்றவன்! – 032

இதோ… பிப்ரவரி மாதம் வந்துவிட்டது. இந்த சுயநேர்காணல் தொடங்கி இன்றோடு சரியாக ஒரு மாதம் ஆகிறது. இதுவரை வடிவரசுவின் பிறந்த ஊர் பற்றியும், குடும்பம், படிப்பு, கல்லூரி, பணிபுரிந்த இடம், எழுத ஆரம்பித்தது உள்ளிட்ட பலவற்றை பற்றியும் கேட்டிருந்தேன். தனக்கேவுரிய பாணியில் சுவைபட எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியிருந்தார். இனி அவரது தனிப்பாடல்கள் குறித்து கேட்க எண்ணியிருக்கிறேன்.

**

சரி, உங்கள் முதல் தனிப்பாடல் பற்றி சொல்லுங்கள்…

கடந்த 2016 ஆம் ஆண்டு, மார்ச் எட்டாம் தேதி – பெண்கள் தினத்தன்று, ஒட்டுமொத்த ஆண்கள் சார்பாக பெண்களைப் போற்றிக் கொண்டாடி ‘அவள்களுக்காக அவன்களின் சமர்ப்பணம்’ என வெளியிடப்பட்ட ‘தொப்புள்கொடி’ பாடல்தான் என் முதல் தனிப்பாடல்.

இப்பாடல் வெளியாகிப் பெற்ற வரவேற்பையும், அன்பையும் இப்போது நினைத்தாலும் உள்ளம் சிலிர்க்கிறது. அத்தனை நெகிழ்வான வாழ்த்துகளை அதிலும் குறிப்பாக, பெண்களிடமிருந்து பெற்றுத் தந்தது. அவ்வார்த்தைகளும், பாடலுக்குக் கிடைத்த வரவேற்பும்தான் என்னைத் தொடர்ந்து தனிப்பாடல்கள் பல எழுதி வெளியிடத் தூண்டியது என்று சொல்லலாம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 031

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=