சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006
ஒருவேளை அவர் சொன்னது நடக்காமல்கூட போக வாய்ப்புண்டு என எப்போதாவது நினைத்ததுண்டா?
இல்லவே இல்லை. முதல் பாடல் என்னிலிருந்து வெளிவந்த பிறகு, அது பாடல்தான் எனக் கண்டுகொண்ட பின்பு, பார்ப்பதையெல்லாம் பாடலாகவும், கவிதையாகவும், கட்டுரையாகவும் எழுதத் தொடங்கினேன். எழுதியதோடு நிற்கவில்லை. உடனே அதை எடுத்துக்கொண்டு போய் அவரிடம் காட்டினேன். அல்லது அவருக்கு மெயில் அனுப்பினேன். என் எழுத்து கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வந்ததைக் கண்டு என்னைவிடப் பெரிதாக மகிழ்ந்தார். தட்டிக் கொடுத்தார். இன்னும் சொல்லப்போனால், ‘எழுத்துதான் இவன் வாழ்க்கை’ என அவர் தனக்குள் நன்றாக உணர்ந்துதான் இவ்வார்த்தைகளை என்னிடம் சொல்லியிருக்கிறார். அருளாளர்களின் வார்த்தைகள் அப்படியே மெய்யாகும் என்பதற்கு நானும் ஓர் உதாரணமே.
[இன்னும்]
*
‘சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003