சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003
முதல் நூலே ஜெயகாந்தனா? ஆச்சர்யமாக உள்ளதே.
ஆமாம், எனக்கும்தான். இத்தனை ஆயிரம் நூல்களில் எதை வாசிக்க, எங்கிருந்து தொடங்க என்று எதுவும் தெரியாமல் குழம்பிப் போயிருந்தேன். அப்போது செய்தித்தாளில் ஜெயகாந்தன் குறித்த கட்டுரை ஒன்று வந்திருந்தது. அதை வாசித்தக் கையோடு அவர் எழுதிய புத்தகங்களில் எதையாவது படிக்கலாம் என்று தோன்ற, உடனே நான் முதுகலைப் படித்த லயோலா கல்லூரி நூலகத்திற்கு சென்று பார்த்தேன். அவரது சில நூல்கள் மாத்திரமே இருந்தன. பெரிதாக யோசிக்கவெல்லாம் இல்லை. நூலின் தலைப்பே என்னை ஈர்த்ததால் கையில் எடுத்தவன், வாசித்து முடித்துவிட்டுதான் கீழே வைத்தேன்.
[இன்னும்]
*