சுள்ளி

மரத்திலிருந்து தானாகக் காய்ந்து விழுந்த அல்லது வெட்டிப்போட்டுக் காய்ந்த மிகச்சிறிய (விரலளவு மற்றும் விரலளவுக்கும் குறைவான) குச்சி.
[சுள்ளிவெறவு என்றும், சுள்ளிக்குச்சி என்றும் சொல்வர்.]
[சுள்ளி = சுள்ளிவெறவு = சுள்ளிக்குச்சி]
– பொறக்கி மேல ஏரிக்கி போயி சுள்ளிக்குச்சி பொறிக்கினு வந்தாதான், வூட்ல வெறவே.
– சுள்ளிக்குச்சி எரிறமாரி எதுத்த வூட்டுக்காரி வவுரு எரிஞ்சியே செத்துடுவா போல.
*