கரித்துணி

சமையலறையில் சூடான பாத்திரங்களை அடுப்பிலிருந்து பிடித்து இறக்கப் பயன்படும் பழைய (கரிபடிந்த) துணி மற்றும் துண்டு.
[புடிதுணி (பிடிதுணி) என்றும் சொல்வர்.]
[கரித்துணி = புடிதுணி = கரித்துண்டு = பிடிதுண்டு]
– நல்லாகீற பொடவய போயி எதுக்கும்மா இப்டி கீச்சி கரித்துணிக்கி போட்ட…?
– கீள கெடக்கற புடிதுணிய எடுத்து கொழம்பு சட்டிய எறக்கனா ஒண்ணும் கொறஞ்சிட மாட்டான், ஒன் புள்ள.
*