பலகைக்கல்

பலகை போன்றிருக்கும் கல் வகை.
[தரையில் போடவும், துணி துவைக்கவும், உட்காரவும் பயன்படுவது.]
[பலகைக்கல் = பலகக்கல் = பலவைக்கல் = பலவக்கல்]
– இந்த பலவக்கல்ல நானும் எங்கைய்யாவும் அம்பது வருசத்துக்கு முன்னால ஆத்துலருந்து தூக்கியாந்தம்.
– என்னதான் வசதி வாய்ப்பு வந்தாலும் பலவக்கல்ல துணி தொவக்கிற மாரி வருமா பாட்டி.
*