அஞ்சாங்கல்

ஒரே அளவுடைய ஐந்து சிறுகற்கள் மற்றும் சிறுவர் முதல் பெரியவர் வரை (குறிப்பாக பெண்கள்) இக்கற்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டு வகை.
[அஞ்சாங்கல் = அஞ்சங்கல் = ஐந்தாங்கல்]
– எப்பப்பாரு சின்னப்பசங்கக் கூட கூடினு அஞ்சாங்கல் ஆடறதே வேலயாப் போச்சில்ல, ஒனக்கு…
– வெளாட வச்சிகீற அஞ்சாங்கல்லத் தூக்கி யாரு இப்டி வெளியப் போட்டாங்கன்னு தெர்ல.
*