தீட்டுக்கல்

கொடுவாள், ஆக்கருவாள், சூரியகத்தி போன்றவற்றைத் தீட்டப் பயன்படும் கல்.
[சற்று உறுதியான, அதே சமயம் மாவுத்தன்மையுடன் கூடிய கல்.]
[தீட்டுக்கல் = தீட்டாங்கல்]
– கொடுவா எடுத்துனு போயி கொஞ்சம் மண்ணள்ளிப் போட்டு திட்டுக்கல்ல தீட்னா போரும், சும்மா சர்சர்’ன்னு வெட்டும்.
– அப்பப்ப கொடுவாள தீட்டுக்கல்ல தீட்டு, அப்பதான் நல்லா வெட்டும்.
*