தளவு

நிலத்தில் விளைச்சல் நன்றாக இருக்கவேண்டும், மழை பொழியவேண்டும், மண் செழிக்கவேண்டும் என வேண்டிக்கொண்டு ஊர் மக்களை அழைத்து விமர்சையாக பொங்கலிட்டு வரிசையாக உட்காரவைத்து சாப்பாடு போடுதல்.
[தளவு = தளுவு]
– ரங்கமூட்டு கொல்லில தளவு போடறாங்கல்ல… அதான் ஊராருலாம் கூட்டமா போறாங்க.
– இந்தவாட்டி இல்லன்னாலும், வர்ற வருசத்துலயாவது ஊர கூப்ட்டு தளவு போட்டுடனும்.
*