சில்லாக்கோல்

நேரான சிறு மூங்கில் கழியின் நுனியில் இரும்பால் செய்து பொருத்தப்பட்டிருக்கும் இருமுனை கொண்ட கூரான ஆயுதம்.
[பாம்பு, எலி, மீன் போன்றவற்றை குத்தப் பயன்படுவது.]
[சில்லாக்கோல் = சில்லாக்குத்தி = சில்லாக்குச்சி = சில்லாக்கம்பி]
– சில்லாக்கோல புடிக்கத் தெரியாதவன்லாம் பாம்பு குத்த வந்துட்டானுங்க பாம்பு.
– யோவ் மாமா, வரும்போது சில்லாக்கோல எடுத்தாய்யா எலி குத்த போவோம்.
*