முரம்பு

1. உறுதியானக் கல்லாகவும் இல்லாமல், பொடி மண்ணாகவும் இல்லாமல், நடுமைய நிலையில் இருக்கும் ஒருவகை மண்.
2. சமமற்ற மேடு பள்ளமான நிலப்பகுதி.
[இச்சொல் கொண்டுதான் (அதுவும், பட்டப் பெயராக) எங்கள் கிராமத்தை அக்கம்பக்கத்தில் உள்ள மற்ற கிராமத்தினர் அழைப்பர்.]
[முரம்பு = மொரம்பு = மொர்ம்பு]
– முரம்பு வரைக்கும் போயிட்டு வர்றன் மாமா.
– இந்த மொரம்பு மண்ணுல எத எப்ப வெதச்சா வெளயும்னு தெரிஞ்சாதான் பொழக்க முடியும்.