ஐபக்கம் – 080 : தேர்ந்த பார்வையாளன்

#ஜூன்28,2024

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி. இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.

என்றும் இல்லாமல் இன்று மிக சீக்கிரமே உறங்கிவிட்ட ஐ, போட்டி தொடங்கும்போது சரியாக சொல்லி வைத்தது போல விழித்திட்டான். இது அல்ல விஷயம்.

சத்தம் போடாமல் எழுந்தவன், எங்களுக்கே தெரியாமல் எட்டி நகர்பேசியில் ஓடும் கிரிக்கெட் போட்டியை ஒரு தேர்ந்த பார்வையாளனைப் போல; ரசிகனைப் போல பார்த்ததுதான்.

ஐ இன்று நடந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டிதான், அவன் தன் வாழ்நாளில் கண்ட முதல் கிரிக்கெட் போட்டி. அதனால்தானோ என்னவோ, தோற்க வேண்டிய போட்டியில் இந்தியா இறுதிவரை போராடி உலகக் கோப்பையை வென்றுவிட்டது. ஆம்!

அப்படித்தான் ஐ’யின் அப்பாவாக சொல்லத் தோன்றுகிறது.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=