ஐபக்கம் – 078 : வேண்டலும் நிறைவேற்றலும்

#ஜூன்25,2024

இன்று ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பதால் ஐ’யை அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குக் கூட்டிப் போய், அவன் கையால் பால் பாக்கெட் வாங்கித் தந்திட்டோம்.

‘நர்சிங் ஸ்டிரைக்’ செய்தபோது வேண்டிக்கொண்டது. அதன்படி முதல் பாக்கெட் கொடுத்துவிட்டோம். அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் இரண்டு தர வேண்டும்.

அதோடு, ஐ கீழே விழுந்தபோது நல்லபடியாக சரியானால் அருகில் இருக்கும் நீலகண்டர் கோயிலுக்கு பிரதோசத்தன்று வந்து சுண்டல் படைத்து, வருவோருக்குத் தருவதாகவும் வேண்டிக் கொண்டாள் மதி. அதையும் சீக்கிரம் நிறைவேற்றிட வேண்டும்.

ஊரில் இருக்கும் நூறு வயதாகும் ஐயா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘காரணம் இருக்கோ, இல்லயோ… அப்பப்ப நம்மள சுத்தி கீற சாமிங்ககிட்ட… எதனா பெராத்தன பண்ணிக்கணும். எதும் இல்லனாலும்… சும்மா போய் ஒரு பொங்கலாவது வக்கணும். அப்பதான் நம்முளுக்கும் சாமிங்களுக்கான ஒறவு பலப்படும். அதோட… நம்மக்கூட எப்பயும் சாமி கீதுன்ற தெம்பும், நெனப்பும் இருக்கும்.’

கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஐயாவின் இந்த வார்த்தைகள் நினைவுக்கு வர, அது எத்தனை மெய்யானது என்று எண்ணிக்கொண்டேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=