ஐபக்கம் – 077 : ஐ’யை தொட்ட ஐ

#ஜூன்24,2024
அவ்வப்போது விளையாட்டாக ஐ’யை தூக்கிப் போய் கண்ணாடி முன்னால் நிறுத்திக் காட்டுவது வழக்கம். அவ்வாறு இன்று காட்டும்போது, தன்னை ஆடியில் முன்பைக் காட்டிலும் நன்றாகக் கண்டுகொண்டு மெல்ல கை நீட்டி தனது உருவத்தை தொட்டுப் பார்த்து மகிழ்ந்திட்டான்; ரசித்திட்டான்.
கூடவே, கண்ணாடியில் தெரியும் என்னையும், மதியையும் நேரிலும் ஆடியிலுமாக மாறி மாறித் தொட்டுப் பார்த்து, ஒரு தேர்ந்த ஆய்வாளனைப் போல ஆய்ந்திட்டான்.
குழந்தைகளைப் பொறுத்தவரை நாள்தோறும் வளர்கிறார்கள். புதிது புதிதாகக் கற்கிறார்கள்; கற்பிக்கிறார்கள். அதையெல்லாம் திறந்த மனத்தோடு ரசிப்பதும்; கற்பதும் பெரியவர்களாகிய நம்மிடம்தான் இருக்கிறது. ஆம், ஆம்!
*